மனதை மயக்கும் 'இசைக் கலைஞர்'... திறமைக்கு வறுமை ஒரு பொருட்டல்ல... ஒரு நிமிடம் 'கேட்டுப் பாருங்கள்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 13, 2020 12:58 PM
வீதிக் கலைஞர் ஒருவர் சாதாரண கொட்டாங்குச்சியில் செய்த இசைக்கருவியைக் கொண்டு மனதை மயக்கும் திரை இசைப்பாடல்களை வாசிப்பது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

வறுமையில் வாடும் பலரும் ஏராளமான திறமைகளை தங்களுக்குள் புதைத்துக் கொண்டு அதனை வெளிப்படுத்த வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கான வாய்ப்பு இன்று இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் கிடைத்து அவர்கள் வாழ்வில் உயர வழி வகுக்கும்.
சமீபத்தில் தெருப் பாடகியான ராணு மண்டல் பாடியிருந்த ‘ஏக் பியார் கா நக்மா ஹை’ என்ற வீடியோ ஒரே நாளில் இணையத்தில் பிரபலமானதை அடுத்து பல திரைப்பட இசையமைப்பாளர்களிடம் இருந்து பாடுவதற்கு அவருக்கு அழைப்புகள் வந்தன. இதன் மூலம் ராணு ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.
அதுபோன்று வீதி கலைஞர் ஒருவர் கொட்டாங்குச்சி வயலின் மூலம் திரை இசை பாடல்களை பிசகாமல் இசைத்து அசத்துகிறார். தமிழ் மட்டுமல்லாது, இந்தி பாடல்களுக்கும் இசையமைத்து கேட்போரை ஆச்சரியமூட்டுகிறார்.
உலக மொழிகளில் எல்லாம் தன் இசைத் திறமையை காட்டும் தெரு இசைப் பாடகர்
👏👏👏 pic.twitter.com/iwuNDdcDLj
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 11, 2020
வீதிகளில் இசையமைத்து பிழைப்பு நடத்தும் இவர் எதிர்காலத்தில் பல சாதனைகளை படைப்பார் என்பது அவரது திறமையான வாசிப்பிலிருந்தே தெரிகிறது.
