SHOCKING VIDEO: "அம்மா, சீக்கிரம் எந்திரிச்சு ஓடுங்க..." - 'ஒரு செகண்ட் தான்... உசுரே உறஞ்சுபோகும் சம்பவம்...' - தல சுத்த விட்ட வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜார்ஜியாவில் நூலிழையில் பெண் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜார்ஜியா நாட்டில், இரண்டு சிறுவர்கள் தங்களது வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்த நிலையில், அவரது தாய் அதனருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துள்ளார். அப்போது, அந்த சிறுவர்களில் ஒருவன், அம்மா எழுந்து ஓடுங்கள் என சத்தமிட, அந்த தாய் எழுந்து திரும்பி கூட பார்க்காமல் ஓடினார்.
அவர் நாற்காலியில் இருந்து நகர்ந்த அடுத்த கணமே, அங்கிருந்த மரம் ஒன்றின் பெரும்பகுதி முறிந்து, அந்த நாற்காலியின் மீது வேகமாக விழுந்தது. அந்த பெண் மரம் விழுந்ததை திரும்பி பார்க்க, ஒரு நொடி தாமதம் ஆகியிருந்தால் தனக்கு என்னவாகி இருக்கும் என எண்ணி அதிர்ச்சியில் உறைந்து நின்றார். தொடர்ந்து, அந்த இரண்டு சிறுவர்களும் அந்த மரத்தையே வெகு நேரம் பார்த்து கொண்டு நின்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. தொடர்ந்து, இந்த வீடியோவை அந்த பெண் இணையத்தளத்தில் வெளியிட, இதைக் கண்ட நெட்டிசன்கள், திகைத்து போயினர். அதே நேரத்தில், சிறுவனின் சமயோஜித புத்தியை எண்ணி அவனுக்கு பாராட்டுக்களும் இணையதளங்களில் குவிந்த வண்ணம் உள்ளன.

மற்ற செய்திகள்
