SHOCKING VIDEO : 'சாலையின் நடுவே 'நிர்வாணமாக' நடந்து சென்ற நபர்'... 'கார்' முன்ன நின்னு ரகள பண்ணிட்டு இருந்தப்போ... எதிர்பாராமல் நடந்த 'சம்பவம்' - சர்ச்சை 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்சாலையில் நிர்வாணமாக ஒருவர் நடந்து சென்றது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி நெட்டிசன்களிடையே கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நிர்வாணமாக சாலையில் நடந்து வரும் அந்த நபர், அங்கு நிற்கும் கார்களை வழிமறித்து பின் கடந்து செல்கிறார். அவரின் அதிர்ச்சியான செயலால் அங்குள்ளவர்கள் பலர் முகம் சுளித்து கொண்ட நிலையில், சிலர் அவரை எண்ணி சிரித்துக் கொண்டே கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இறுதியாக வெள்ளை கார் ஒன்றின் முன் சென்று நிற்கும் அந்த நபர், அதனை செல்ல விடாமல் அதன் முன்னேயே நின்று கொண்டிருக்கிறார். காரில் இருந்த நபர், அதனை திருப்பி செல்ல முயற்சித்த நிலையில், அவ்வழியே செல்ல முடியவில்லை. இதனால் காரில் இருந்த நபர் விரக்தியடைந்ததாக தெரிகிறது. உடனடியாக அவர் காரை விட்டு இறங்கி, நிர்வாணமாக நின்ற மனிதரிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்த நிலையில், திடீரென அந்த நிர்வாண மனிதரை ஓங்கி அடிக்க மறுகணமே அந்த நபர் சாலையில் வேகமாக விழுந்தார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இணையதளங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தொடர்பாக எந்த விவரங்களும் சரிவர தெரியாத நிலையில், அந்த நபரின் இந்த நடவடிக்கைக்கு வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்தும் விரிவான விளக்கங்கள் எதுவும் இல்லை.
எச்சரிக்கை : இந்த வீடியோவின் இறுதியில் வன்முறை காட்சி இடம்பெற்றுள்ளது. அதே போல, nude கன்டென்ட் இருப்பதால் அதனை மனதில் வைத்துக் கொண்டு வீடீயோவை காணுங்கள்.

மற்ற செய்திகள்
