'5 நட்சத்திர' ஹோட்டலில்.. ஏழைக்குழந்தைகளுக்கு 'தீபாவளி' விருந்து.. அளித்த அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Oct 28, 2019 05:55 PM
நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக புத்தாடை அணிந்து கொண்டாடினர். அதேவேளையில் மந்திரி ஒருவர் ஏழைக்குழந்தைகளுக்கு விருந்து அளித்து தீபாவளி கொண்டாடி இருக்கிறார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வும் அம்மாநில உயர்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்திற்கான மந்திரியுமான ஜிதேந்திர பட்வாரி ஏழைக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியுள்ளர்.
அவர் அந்த மாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் சிலருக்கு இந்தூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்து அளித்து மகிழ்ந்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து அறிந்த அனைவரும் அவரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
Tags : #MADHYA PRADESH
