‘இனி மெசேஜிலும் ஃபோட்டோ, வீடியோ ஷேர் செய்யலாம்’.. ‘இந்தியாவில் அறிமுகமானது கூகுளின் RCS மெசேஜிங் சேவை’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Oct 29, 2019 11:31 PM

ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பிலிருந்து RCS எனும் மெசேஜ் சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

Google Messages RCS App India Download How To Enable

பல வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட SMS சேவைகள் தற்போது பெரும்பாலும் வங்கி, ஷாப்பிங் போன்ற வணிக ரீதியான தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. SMS சேவைக்குப் பதிலாகத் தான் வாட்ஸ்அப் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவைகள் வந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இது SMS மூலம் வருவாய் ஈட்டி வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரிய அடியே.

இந்நிலையில் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக Rich Communication Service எனும் RCS சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இதில் SMS போல எழுத்துகள் மட்டும் இல்லாமல், படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யவும், க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு போன்றவைகளையும் பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் உங்கள் மெசேஜ் ஆப்பிலேயே இருக்கும் எனவும், இதற்கு நெட்வொர்க் இல்லாமல் வைஃபை வசதியையும் உபயோகிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதை enable செய்ய உங்கள் கூகுள் Messages ஆப்பின் Settings பகுதிக்குச் சென்று, அதில் General பிரிவில் உள்ள Chat Features சென்று Enable Chat Features என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போது சில மொபைல்களில் மட்டுமே இதற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Tags : #GOOGLE #ANDROID #SMS #APP #ENABLE #RCS #IPHONE #IMESSAGE #INDIA #DOWNLOAD