VIDEO: அடேங்கப்பா! அம்புட்டு 'தூரத்துல' இருந்து அடிச்சாலும்... ஸ்டெம்ப 'தெறிக்க' விட்டு... விட்டதை புடிச்சுட்டாரே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி மணீஷ் பாண்டே(50), கே.எல்.ராகுல்(39), ஷர்துல் தாகூர்(20) ஆகியோரின் அதிரடியால் 165 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் குப்தில்(4) சொதப்பினாலும், மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் முன்ரோ சிறந்த துவக்கம் கொடுத்தார். இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய முன்ரோ(64) ரன்களில் அவுட் ஆனார்.
you hate to see it #viratkohli #relaythrow pic.twitter.com/T12wOpJjFy
— Y. (@yaynyevi) January 31, 2020
நவ்தீப் சைனி வீசிய 11-வது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க ஆசைப்பட்டு முன்ரோ ஓட ஷர்துல் தாகூர் தூக்கிப்போட்ட பந்தை சரியாக பிடித்த கோலி அதே வேகத்தில் துல்லியமாக ஸ்டெம்பை தகர்த்து முன்ரோவை அவுட் செய்தார். ஷர்துலின் முதல் ஓவரில் முன்ரோ கொடுத்த கேட்சை நழுவவிட்ட கோலி அவரை ரன்-அவுட் செய்து தன்னுடைய கணக்கை தீர்த்துக் கொண்டார். விராட் கோலியின் இந்த துல்லிய ரன்-அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
