'முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போன்கால்...' 'எந்த இடத்திலிருந்து பேசிருக்காங்கன்னு செக் பண்ணுங்க...' பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 24, 2020 12:53 PM

முதலமைச்சர் வீட்டில் குண்டு வைத்துள்ளதாக போனில் மிரட்டிய தனியார் நிறுவனத்தின் மேலாளரார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

The person threat of having a bomb in the chief minister\'s house

நேற்று இரவு காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு போன் செய்த ஒரு நபரால் அங்கிருந்த அனைவரும் மிரண்டு போயுள்ளனர். போனில் பேசிய அந்த நபர் தமிழக முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக சைபர் கிரைம் போலீசார் எந்த இடத்திலிருந்து போன் செய்யப்பட்டது என்பதை பற்றி விசாரித்தனர். விசாரணையில் அந்த போன்கால் மடிப்பாக்கத்தில் இருந்து செய்யப்பட்டுள்ளது என்று  தெரிய வந்ததை அடுத்து அப்பகுதி போலீசாரை தொடர்பு கொண்டுள்ளனர். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தினர்.

அதன்படி போனில் மிரட்டியது மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பது தெரிய வந்தது. இவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் இதற்கு முன்பே கடந்த ஜனவரி மாதம் முதல்வர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைதாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #BOMBTHREAT #CM