’அடேய் ... ஓடுனா மட்டும் விட்ருவோமா..’ நேசமணி ஸ்டைலில் சென்னையில் நடந்த பரபரப்பு சேஸிங்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 13, 2019 10:57 AM

சிறுவர்கள் 3 பேர் இணைந்து நள்ளிரவு நேரத்தில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

robbery in midnight, 2 minor boys arrested by police after chasing

சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது தஷா மகான் பர்கத் தெரு. இங்கு வசித்து வரும் அக்பர் செரிப் என்பவரின் 21 வயது மகன் குல்பார்ன் செரிப் மெக்கானிக்காக வேலை பார்த்து வருபவர். இவர் நேற்றிரவு வேலை முடிந்து தன து இருசக்கர வாகனத்தில் சென்று போர் நினைவுச் சின்னத்துக்கு அருகில் இருந்த திருநங்கைகளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று சிறுவர்களில் ஒருவன் எதிர்பாராத விதமாக குல்பார்னின் செயின் மற்றும் வாட்சை அவரிடம் இருந்து பிடுங்கியுள்ளான். மேலும் செரிப்பின் செல்போனை பிடுங்க முயன்ற போது உஷாரான செரிப் சிறுவனைப் பிடிக்க முயற்சித்தார். ஆனால் சிறுவன் செரிப்பை உதறித்தள்ளிவிட்டு, தன் நண்பர்களுடன் பைக்கில் ஏறிச்சென்று தப்பித்தார்.

ஆனாலும் வாலஜா சந்திப்பில் உள்ள பூக்கடை காவல் நிலையத்துக்குச் சென்று செரிப் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் சிறுவர்களைத் துரத்த ஆனால், பூக்கடை காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் நிலையம், ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களைக் கடந்து டிமிக்கி கொடுத்து பிராட்வே பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து போலீஸாரை சேஸ் செய்யவிட்டு, திக்குமுக்காடச் செய்த சிறுவர்களை இறுதியாக வடக்குக் கடற்கரை காவல் நிலைய அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

ஆனாலும் அதில் ஒரு சிறுவன் தப்பியோடிவிட்டான். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போலீஸாரை தன் பின்னால் சேஸிங் செய்ய வைத்த இந்த சிறுவர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : #CHENNAI #ROBBERY