“தமிழகத்தில் 6 பேர் .. பீகாரில் 12 பேர்!”.. இடி, மின்னல் தாக்கி பரிதாபமாக பலி ஆன சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 26, 2020 07:32 PM

வட மாநிலங்களில் கோடைகால மழை பெய்து வருகிறது. பீகாரில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பீகாரில் மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அம்மாநிலத்தின் 3 மாவட்டங்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதில் 9 பேர் சரண் மாவட்டத்தையும், இரண்டு பேர் ஜமுய் மாவட்டத்தையும், ஒருவர் போஜ்பூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

12 in north, 6 in TN dead for lightning and thunderstorm

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல் தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் கூடி பெய்த மழையால் 5 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இவர்களுள், காஞ்சிபுரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் என்கிற விவசாயி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற மீனவர் உள்ளிட்டோர் இடி தாக்கி பலியாகினர்.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கை உபாதைக்கு வெளியில் சென்ற11-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற தோழி படுகாயம் அடைந்தார். மேலும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வேலூரில் பெருமாள் என்பவர் நிதி தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று பெய்த மழையில், இடி, மின்னல் தாக்கி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழந்தார்.