'தமிழகத்தில்' தென்மேற்குப் பருவமழை 'எப்போது' தொடங்கும்?... இந்திய வானிலை ஆய்வு மையம் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய துணைக் கண்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "பொதுவாக தென்மேற்குப் பருவமழை இந்திய துணைக் கண்டத்தில் கேரளாவிலிருந்துதான் தொடங்கும். அதன் அடிப்படையில் கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். தமிழகத்தில் ஜூன் 4ஆம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை முடிவடையும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் மழை இயல்பான அளவில் இருக்கும். சராசரியாக 88 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும். தொடங்கிய முதல் வாரத்தில் தென்னிந்தியப் பகுதிகள் முழுவதும் தென்மேற்குப் பருவமழை சென்றடைந்து பின்னர் சிறிது தொய்வு நிலையை அடைந்து மீண்டும் இந்தியா முழுவதும் சென்றடையும். ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒரு வாரம் முன்னதாகவே பருவக்காற்று சென்றடையும். பருவநிலை மாற்றத்தால் இரண்டாம் பருவத்தில் பருவமழை (அக்டோபர் மாதத்தில்) குறையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.