'சென்னையில் இடி மின்னலுடன் கூடிய சூர மழை'! .. பல இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 26, 2020 07:40 AM

சென்னை மாநகரப் பகுதிகளில்  இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய சூர மழை பெய்து வருகிறது.

Rain in Chennai with thunders power cut in few places

சூளைமேடு, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, ஆலந்தூர், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் சென்னையில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக கோடம்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுமுள்ளது.

இதேபோல் தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், அங்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தவிர, பாலவாக்கம், ஓம்.எம்.ஆர், ஈ.சி.ஆர் ஆகிய இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழையும், திருவள்ளூரில் புழல், செங்குன்றம், பொன்னேரி, பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

தவிர, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : #RAIN #CHENNAI