‘தண்ணீர் குடிக்க வந்த மான்கள்’... ‘மின்னல் வேகத்தில்'... ‘பாய்ந்து சுருட்டிய மலைப் பாம்பு’... 'மிரள வைத்த வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 27, 2019 11:25 AM

தாகத்திற்கு தண்ணீர் குடிக்க மான்களில், ஒரு மானை மின்னல் வேகத்தில் மலைப் பாம்பு சுருட்டிய வேட்டையாடிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Python Leaps Out of water at lightning speed to attack deers

மகாராஷ்டிரா மாநிலத்தின் சென்ட்ரல் டிவிசன் வனப்பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. இங்கு 4 மான் குட்டிகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. அப்போது ஏதோ சத்தம் கேட்க மான்கள் தண்ணீரை குடிப்பதை நிறுத்திவிட்டு பார்த்தன. ஆனால் எந்த விலங்கினமும், அதன் கண்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில் நீரில் மறைந்திருந்த மலைப் பாம்பு ஒன்று, மின்னல் வேகத்தில் வந்து, ஒரு மானை பாய்ந்து சுருட்டி வேட்டையாடியது.

வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான, அந்த திகைக்க வைக்கும் காட்சிகளை, சுஷாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மலைப்பாம்பு மானை வேட்டையாடிய வேகம், மனிதன் கண் இமைக்கும் நொடியை விட மிகக் குறைவானது. சாதாரணமாக மனிதன் கண் இமைப்பதற்கு, 200 மில்லி நொடிகள் ஆகிறது என்றால், மலைப்பாம்பு மானை வேட்டையாட எடுத்துக் கொண்ட நேரம் 50 மில்லி நொடிகள் மட்டுமே என்று வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா கூறியுள்ளார்.

Tags : #VIDEO #VIRAL #DEER #PYTHON #ATTACK