'இதுல ஹைலைட்டே இதான்'.. காதல் வாழ்க்கை அமையாததால் வளர்ப்பு நாயுடன் திருமணம்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Aug 01, 2019 11:47 AM

இங்கிலாந்தில் முன்னாள் மாடல் அழகி, தான் ஆசையாக வளர்க்கும் செல்லப் பிராணியான வளர்ப்பு நாயினை லைவ் டிவி நிகழ்ச்சியில் மணம் முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

UK model Elizabeth and Logan as Dog and Wife Video

இங்கிலாந்தின் எஸ்காட் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான மாடல் அழகி எலிசபெத் ஹோட், டிவி நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். 80களில் ஸ்விம் ஸூட் மாடல் அழகிகள் என்றாலே பிரபலமான பெயராக இவரது பெயர் அடிபடும். அப்படி ஒரு அழகிதான் தன்னுடைய வளர்ப்பு நாயினை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை 220 ஆண்களுடன் பழகிய எலிசபெத் ஹோட், கடந்த 8 ஆண்டுகளில் 6 ஆண்களுடன் நெருக்கமாக உறவு வைத்திருந்துள்ளாராம். இரண்டு முறை நிச்சயதார்த்தம் வரை சென்றும் தனது திருமணம் நடக்கவில்லையாம். இதனால் மனம் வெதும்பிப் போன எலிசபெத் ஹோட், தனக்கு காதலில் அதிர்ஷ்டம் இல்லை என்பதால், தான் வளர்க்கும் நாயையே நாளை (ஆகஸ்ட் 02) திருமணம் செய்வதாக டிவி ஷோவில் அறிவித்துள்ளார்.

உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும், கேட்காத எலிசபெத், எந்த ஆண்களும் உறுதுணையாக இல்லாத தனக்கு, தான்  வளர்க்கும் லோகன் என்கிற நாய்தான் உறுதுணையாக இருப்பதாகவும், அதனால் லோகனை மணம் முடிப்பதில், தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கென அந்த நாயின் முன்னங்கால்களில் பிரேஸ்லெட் மாட்டி நிச்சயதார்த்தம் செய்துகொண்டதோடு, நாயின் முன், ‘I Do’ என்று நாய் தனக்கு சம்மதம் சொல்வது போல் ஒரு போர்டு வைக்கப்பட்டதுதான் ஹைலைட்.

 

Tags : #MARRIAGE #PET #DOG