இந்திய பெண்ணுடன் பிரபல பாகிஸ்தான் வீரர் திருமணமா..? வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 31, 2019 10:30 AM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண்ணை மணமுடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை திருமணம் செய்துள்ளார். அதேபோல் பாகிஸ்தான் வீரர்களான ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் கான் உள்ளிட்ட வீரர்களும் இந்திய பெண்ணை மணமுடித்துள்ளனர்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஷமியா அர்ஸு என்ற இந்திய பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷமியா அர்ஸு, ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தை சேர்ந்தவர். பி.டெக் ஏரோனேடிகல்ஸ் படித்துள்ள ஷமியா, எமிரேட் ஏர்லைன்ஸில் இன்ஞினியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஹசன் அலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னுடைய திருமணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இதுகுறித்து இரு வீட்டாரும் சந்தித்து பேசி முடிவெடுப்பார்கள். விரைவில் அந்த தகவலை அனைவருக்கும் தெரிவிப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.
just wanna clarify my wedding is not confirmed yet, our families have yet to meet and decide upon it. will make a public announcement very soon in sha allah. #gettingreadyforfamilymeetup
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) July 30, 2019
