'அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல' ... ஊரடங்கு இந்த 'நாள்' வர தான் .. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கான எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் மூலம் அடித்தட்டு மக்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நாட்கள் இன்னும் நீட்டிக்கப்படும் என பல்வேறு கருத்துகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் ஏப்ரல் 14 - ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கான திட்டம் ஒன்றுமில்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தெரிவித்துள்ளார். நேற்று மான் கி பாத் உரையில், ஊரடங்கு மூலம் இந்திய மக்களுக்கு சிரமத்தை உண்டாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.