'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உயிரிழந்த ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவரை முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் தூக்கி கொண்டு செல்லும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ரவிசங்கர் என்பவர் கேன்சர் காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ரவிசங்கரின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளே உடனிருந்தனர். இதனால் என்ன செய்வது என்று ரவிசங்கரின் மனைவி தவித்து வந்த நிலையில், அவரது வீட்டின் அருகிலுள்ள முஸ்லீம் மதத்தை சேர்ந்த நபர்கள் சிலர் ஒன்றிணைந்து ரவிசங்கரின் உடலைத் தூக்கி சென்று ஹிந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்தனர்.
ஊரடங்கு சமயத்தில் உறவினர்கள் இல்லாத ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் உடலை முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் தோளில் சுமத்தி சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Ravi Shankar, resident of Anand Vihar locality in UP's Bulandshahar district died of cancer on Friday. Deceased, hailing from a poor family is survived by wife and four children. Muslim residents in the neighborhood helped the family during funeral procession and cremation. pic.twitter.com/3mgaI1zap3
— Piyush Rai (@Benarasiyaa) March 29, 2020