‘அடையாளம் தெரியாத அவரதான் தேடிட்டு இருக்கோம்’... ‘லாக்டவுனுக்கு’ முன்... ‘வாடிக்கையாளர்’ கொடுத்து சென்ற ‘வேறலெவல்’ இன்ப ‘அதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 28, 2020 08:19 PM

அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலால் ஹோட்டல்கள் மூடப்படுவதற்கு முன் வாடிக்கையாளர் ஒருவர் 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Coronavirus Lockdown Customer Leaves Huge Tip In US Restaurant

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ள அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அங்கு நேற்று மட்டும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளான நிலையில், 398 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அனைத்து உணவகங்களும் மூடப்பட்டு, ஒரு சில ஹோட்டல்களில் பார்சல் வசதி மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோட்டல்கள் மூடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடையாளம் தெரியாத வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள ஊழியர்களுக்கு 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வைத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள ஓட்டல் உரிமையாளர் ரோஸ் எட்லண்ட், “இந்த உலகில் உண்மையான, அற்புதமான மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பூமியில் நாமும் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த வாடிக்கையாளர் அளித்த 10 ஆயிரம் டாலர்களும் 200 ஊழியர்களுக்கு தலா 500 டாலர்கள் என சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாடிக்கையாளர் யார் எனத் தெரியாத நிலையில் அவரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONAVIRUS #US #HOTEL #TIPS #LOCKDOWN