'கொரோனா' தடுப்பு 'நடவடிக்கைகள்...' 'தமிழக அரசு என்ன செய்துள்ளது...?' 'முதலமைச்சரின் உத்தரவுகள் என்ன?...''முழுமையான தகவல்களை எதில் தெரிந்து கொள்ளலாம்...?'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 01, 2020 09:45 PM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Orders issued by C.M of Tamil Nadu to control corona

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாகவே, முதலமைச்சர்  சார்பில் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன..

அந்த வகையில் கல்வி நிறுவனங்களை மூடவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும். திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மூடப்பட வேண்டும், திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த கூடாது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூடாது. அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், டாஸ்மாக் பார்களை மூடவேண்டும். விடுமுறை காரணமாக பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

 இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு தமிழக்ததில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மக்கள் அநாவசயிமாக வெளியில் நடமாடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது பொதுமக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. மக்களுக்குத்தேவையான விழிப்புணர்வு தகவல்களையும், அவ்வப்போது ஊடகங்கள் வழியாக தெரியப்படுத்தி வருகிறது.

மேலும், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம், உட்பட 1.5 கோடி முகக்கவசம் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். டெல்லி மாநாட்டில் கலந்த கொண்டு தமிழகம் வந்தவர்களை முழுமையாகக் கண்டிறிய முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை, யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் முதலமைச்சர்  பிறப்பித்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் அரசு சார்பில் 15 ஆயிரம் படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த நிலவரங்களை தெரிந்துகொள்ள www.stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதில், கொரோனா குறித்த அரசின் அறிவிக்கைகள், அரசின் முக்கிய அறிவிப்புகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனாவைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுளோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை என கொரோனாவைரஸ் தொற்றுக் குறித்த அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது,

Tags : #CORONA #TAMILNADU #CHIEFMINISTER #EDAPPADIPALANISWAMI