‘இனி குடும்பத்துக்காக நேரத்த செலவிடணும்’.. திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அதிர்ச்சியளித்த சிஎஸ்கே வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 26, 2019 05:28 PM
குடும்பத்துடன் நேரம் செலவளிக்க விரும்புவதால் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாட்சன் ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். இந்த சீசனின் தொடக்க போட்டிகளில் பேட்டிங் சொதப்பினாலும் கடைசியாக நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அசத்தினார்.
வாட்சன் இதுவரை 700 -க்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 25,000 -க்கு அதிகமான ரன்களும், 600 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ‘பிக் பேஷ்’ டி20 தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக வாட்சன் இருந்தார்.
இந்நிலையில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால் ‘பிக் பேஷ்’ டி20 லீக்கில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். இதில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 1000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையையும் வாட்சன் பெற்றுள்ளார்
