‘அதுக்கு பழகி இதுக்கு செட் ஆயிருச்சு’.. விமான நிலையத்தில், தரையில் படுத்து தூங்கும் தல!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 10, 2019 02:47 PM

ஐபிஎல் 12-ஆம் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான மேட்ச்களை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.

\'This is what happens if you have morning flight\' MSDhoni viral post

சென்னை அணியின் ஹோம் கிரவுண்டான இந்த சேப்பாக்கம் பிட்ச் மீது தோனி உட்பட பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்த நிலையில், மேட்சை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்துக்குச் சென்ற தோனியும், அவரது மனைவி சாக்‌ஷி தோனியும் அயர்வினால், தரையில் படுத்து உறங்கிய காட்சி இணையதளங்கில் புகைப்படமாக வைரலாகி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாண்ட போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த மேட்சுக்கு பிறகு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக சென்னை விமான நிலையத்துக்குச் சென்று காத்திருந்தபோது மிகவும் சோர்வுற்றிருந்த தோனி தரையிலேயே படுத்து உறங்கிவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தோனி, ஐபிஎல் மேட்ச் டைமிங்க்குக்கு பழகி பழகி, காலை நேர விமானத்தை பிடிக்க போகும்போதெல்லாம் இதுதான் நடக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரஹானே, மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா, டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் முகமது கைஃப் உள்ளிட்டோர் கூறியிருந்த குற்றச்சாட்டுப்படி ஸ்லோ ஓவர் ரேட் காரணமாகவே இம்முறை ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொன்றுமே இரவு 12 மணி வரை நடப்பதாகவும்,  குறிப்பிட்ட நேரத்தில் போட்டிகள் முடிவதில்லை என்றும் ஃபீல்டிங் செட் செய்வதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதை தோனியின் இந்த பதிவும், விமான நிலையத்தில் அயர்ந்து தூங்கும் தோனியின் இந்த புகைப்படமும் உறுதி செய்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தோனி டைமிங் என்று சுட்டிக்காட்டியிருப்பதும் கூட இதைத்தான் என்றும் இணையதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #INSTAGRAM #VIRAL