எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே ‘டனுக்கு ரிட்டக்கு டும்டும்’ தான்.. என்னய்யா இருக்கு இந்த வீடியோல.? எல்லோரும் சொல்லும் ‘ஒரே’ பதில்..!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Selvakumar | Nov 10, 2020 07:12 PM

தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக வலம் வீடியோ என்னவென்றால் அது ‘டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்’ தான்.

Animated funny video viral on social media with memes

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என உலக சுகாதார மையம் தெரிவித்தது. ஆனால் இந்திய மக்கள் அதை கொண்டாவே பழகி விட்டனர். வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், அனைவரும் கவலையை மறக்கும் இடமாக சமூக வலைதளங்கள் இருக்கின்றன.

அதில் திடீரென சம்பந்தமே இல்லாமல் ஏதாவது டிரெண்டாகும். அதற்கு உதாரணமாக நடிகர் வடிவேலுவின் சுத்தியல் காமெடி உலகம் முழுவதும் டிரெண்டானது. இது ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகி அனைவரது கவனத்தை ஈர்த்தது. அதேபோல் டிரெண்டாகும் வீடியோ, போட்டோகள் அனைத்தும் எல்லோரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக்கிலும் உலா வர ஆரம்பித்துவிடும்.

அந்தவகையில் நேற்று திடீரென ஒரு வீடியோ அனைவரது வாட்ஸ் அப் Status-களிலும் உலா வந்தது. அது ஒரு animated-ல் வடிவமைக்கப்பட்டு, பொம்மை போன்ற அமைப்பில் ‘டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்’ என்று பாடி கொண்டே வரும் வீடியோதான். இதை Status-ஆக வைத்த அனைவரும் சொன்ன ஒரே பதில் ‘நல்லா இருந்தது வைத்தோம்’  அதை Status-ஆக வைத்ததற்கு வேறு காரணமெல்லாம் ஒன்றும் இல்லை என்றும் கூறினர். தற்போது இந்த வீடியோவை மீம்ஸ்களாக உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags : #VIRALVIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Animated funny video viral on social media with memes | Fun Facts News.