'எல்லாருமே முகத்துல மாஸ்க் போட்ருந்தாங்க...' 'என்ன விட்ருங்கன்னு கெஞ்சிட்டே இருந்தேன், ஆனா அவனுங்க...' நடுநடுங்க செய்யும் அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் பெட்டியா என்ற பகுதியில், வீட்டிலிருந்து மருந்து வாங்க சென்ற பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![abuse, gang kidnapped the girl who went to buy medicine abuse, gang kidnapped the girl who went to buy medicine](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/sexual-abuse-gang-kidnapped-the-girl-who-went-to-buy-medicine.jpg)
சனிக்கிழமை மாலை ஒரு பெண் ஹர்சித்தி பஜாரில் இருந்து மருந்து வாங்கிக்கொண்டு வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அப்போது பொலெரோ காரிலிருந்த சில மர்ம நபர்கள் அவரைக் கடத்திச் சென்று அவரது கை, கால்களைக் கட்டி கூட்டாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின் அந்தக் கும்பலிடமிருந்து ஒரு வழியாக தப்பித்த பெண் போலீசில் புகாரளிக்க சென்றுள்ளார் .
இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவிக்கையில், "குற்றவாளிகள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். நான் மீண்டும் மீண்டும் என்னை விட்டு விடும்படி கெஞ்சினேன், ஆனால் குற்றவாளிகள் எதையும் கண்டுகொள்ளாமல், திரும்பத் திரும்ப என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர் "என்றார்
அப்பெண்ணிடமிருந்து புகாரை பெற்ற காவல்துறையினர் அந்த பெண்ணை முதல்கட்ட சிகிச்சைக்காக மஜோலியா சுகாதார மையத்திற்கு அனுப்பியுள்ளனர், மேலும் அங்குள்ள மருத்துவர்கள் அவரை சிறந்த சிகிச்சைக்காக பெட்டியா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)