வளர்ப்பு மகளுடன் திருமணம்??.. 2 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க்கின் தந்தை?.. பல ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த அதிர்ச்சி உண்மை..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 15, 2022 07:58 PM

எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் குறித்து, தற்போது ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

elon musk father errol musk married his step daughter sources

Also Read | "மொத்தம் 12 எடத்துல கடிச்சுருக்கு.." வளர்ப்பு நாயால் தாய்க்கு நேர்ந்த விபரீதம்.. கதறித் துடித்த மகன், கடைசியில் எடுத்த முடிவு

உலக அளவில் நம்பர் ஒன் கோடீஸ்வரரும், முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க், தனது சமூக வலைத்தளத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

சமீபத்தில் கூட, இவர் ட்விட்டரை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து, பின்னர் அதனை ரத்து செய்ததும், பதிலுக்கு ட்விட்டர் இவர் மீது புகார் அளித்ததும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது எலான் மஸ்க்கின் தந்தையான எரோல் மஸ்க் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எரோல் மஸ்க்கிற்கு மொத்தம் இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியான மே மஸ்க்கிற்கு பிறந்தவர்கள் தான் எலான் மாஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டாஸ்கா மஸ்க். திருமணமான 9 ஆண்டுகளில் மனைவியை பிரிந்த எரோல், ஹைடி என்பவரை பின்னர் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் ஆஷா, அலெக்சாண்டரா என்ற இரு மகள்களுக்கும் எரோல் தந்தை ஆனார்.

elon musk father errol musk married his step daughter sources

ஏரோல் மஸ்க்கை மணப்பதற்கு முன்பாகவே, ஹைடிக்கு ஜனா என்ற மகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தான், எரோல் மஸ்க்கிற்கும், ஹைடியின் மகளான ஜனாவிற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் இணைந்து வாழ தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், எரோல் மஸ்க் - ஜனா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, தங்களின் முதல் குழந்தையை பெற்ற எரோல் - ஜனா, 2019 ஆம் ஆண்டு, தங்களின் இரண்டாவது குழந்தையும் பெற்றுள்ளனர். எரோல் மஸ்க்கிற்கு 76 வயதாகும் நிலையில், அவரது வளர்ப்பு மகளான ஜனாவுக்கு 35 வயது தான் ஆகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் இது பற்றிய தகவல், வெளியே தெரிய வந்துள்ளது.

elon musk father errol musk married his step daughter sources

இது தொடர்பாக சமீபத்தில், எரோல் அளித்திருந்த பேட்டி ஒன்றில், "நாம் இந்த உலகில் வாழும் ஒரே நோக்கம் இனப்பெருக்கம் செய்வதற்காக தான்" என குறிப்பிட்டுள்ளார். தனது வளர்ப்பு மகளை எரோல் மஸ்க் திருமணம் செய்து கொண்டதால், எலான் மஸ்க் உள்ளிட்ட மற்ற பிள்ளைகள் யாரும் தங்களிடம் பேசுவதில்லை என்றும், தங்களின் சகோதரி உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றதால், அவர்கள் இதனை விரும்பவில்லை என்றும் எரோல் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் கூட, தந்தையுடன் நல்ல உறவில் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

elon musk father errol musk married his step daughter sources

கடந்த வாரத்தில், தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் உறவில் இருந்த எலான் மஸ்க், அவருடன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, தந்தையாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "பத்தி எரியும் இலங்கை.. பொங்கி எழும் மக்கள்.." போராட்ட களத்திற்கு நடுவே காதல் ஜோடி செய்த காரியம்!!

Tags : #ELON MUSK #ELON MUSK FATHER #ERROL MUSK #STEP DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon musk father errol musk married his step daughter sources | World News.