"அதை முதல்ல நிறுத்துங்க"... ட்விட்டர் CEO-க்கு வார்னிங் மெசேஜ் அனுப்பிய எலான் மஸ்க்.. என்ன ஆச்சு.?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வாலுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியிருப்பது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | திருமணத்தை மீறிய உறவில் வந்த சிக்கல்.?.. சோகத்தில் மூழ்கிய இரண்டு குடும்பங்கள்.. திருச்சியில் பரபரப்பு..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
நிரந்தர முடிவு
ட்விட்டர் தளத்தில் உள்ள போலி மற்றும் ஸ்பாம் கணக்குகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு எலான் மஸ்க் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், இவை குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை என்றால் ட்விட்டர்நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிட நேரிடும் எனவும் மஸ்க் எச்சரித்திருந்தார். அதன்படி, கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக மஸ்க் தரப்பு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, மஸ்க் மீது வழக்கு தொடர இருப்பதாகவும், ட்விட்டர் டீலை முடிக்காவிட்டால் இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை மஸ்க் வழங்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால், ட்விட்டர் நிறுவனத்தின் CFO நெட் செகல் ஆகியோருக்கு எலான் மஸ்க் மெஸேஜ் ஒன்றை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த மெசேஜில்,"உங்கள் வழக்கறிஞர்கள் இந்த உரையாடல்களைப் பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்துகின்றனர். அதை நிறுத்த வேண்டும்" என மஸ்க் குறிப்பிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | சோகத்தில் முடிந்த கிக்பாக்சிங் போட்டி.. கோமா நிலைக்கு போன இளம் வீரருக்கு நேர்ந்த துயரம்..!

மற்ற செய்திகள்
