அப்பவே..அப்படியா..?.. ட்ரெண்டாகும் எலான் மஸ்க்கின் பழைய விசிட்டிங் கார்டு.. மஸ்க் போட்ட 'நச்' கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 14, 2022 11:19 AM

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் பழைய விசிட்டிங் கார்டின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Elon Musk business card from 1995 goes viral

Also Read | Heat பண்ணாலும் உருகாத ஐஸ்க்ரீம்.. குதூகலமான ஐஸ்க்ரீம் பிரியர்கள்.. "வெயில்'ல வெச்சு கூட இத குடிக்கலாம் போலயே.."

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

விசிட்டிங் கார்டு

1995 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் துவங்கப்பட்டது Zip2 நிறுவனம். செய்தித் தாள்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியை செய்துவந்த இந்த நிறுவனத்தை எலான், அவரது சகோதரர் கிம்பல் மஸ்க் மற்றும் கிரெக் கௌரி ஆகியோர் துவங்கினர். பின்னர் இந்நிறுவனத்தை 305 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கணினி தயாரிப்பு நிறுவனமான காம்பேக் வாங்கியது. இந்நிலையில், Zip2 நிறுவனத்தின் இணை நிறுவனராக மஸ்க் இருந்த போது அவர் பயன்படுத்திவந்த விசிட்டிங் கார்டு தற்போது சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Elon Musk business card from 1995 goes viral

வைரல் ட்வீட்

இந்நிலையில், டாட்ஜ் டிசைனர் என்னும் ட்விட்டர் பக்கத்தில் 1995 ஆம் ஆண்டு எலான் மஸ்க் பயன்படுத்திய இந்த விசிட்டிங் கார்டின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகியது. இதுவரையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். இதனிடையே எலான் மஸ்க்கின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது இந்தப் புகைப்படம். 

இந்த பதிவில் எலான் மஸ்க்,"பண்டைய காலங்கள்" (Ancient times) என கமெண்ட் செய்துள்ளார். இந்நிலையில், 1995 ஆம் ஆண்டிலேயே நேர்த்தியாக இந்த விசிட்டிங் கார்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் நிறைய இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | பதவி விலக மறுக்கும் கோத்தபய.. பிரைவேட் ஜெட் வேண்டும் என கோரிக்கை... பரபரப்பில் இலங்கை..!

Tags : #ELON MUSK #ELON MUSK BUSINESS CARD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk business card from 1995 goes viral | World News.