"இனி அடிக்கடி சட்டை இல்லாம சுத்தணும்.." கடற்கரையில் 'ENJOY' பண்ணும் எலான் மஸ்க்.!.. வாழ்றாருயா மனுசன்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 20, 2022 03:54 PM

உலகின் மிக பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அடிக்கடி இணையத்தில் அதிகம் வைரலாக கூடியவர்.

Elon musk shirtless pic from greece gone viral

Also Read | "மொத்தமா 23 சாக்கு பைகள்.." போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்.. "வண்டிய நிறுத்தி செக் பண்ணதுல.." அதிர்ந்து போன போலீசார்

அதிலும் குறிப்பாக, கடந்த சில தினங்களாகவே ட்விட்டர் - எலான் மஸ்க் விவகாரம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, அதில் எலான் மஸ்க் கையெழுத்தும் போட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனிடையே, திடீரென ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்குவதாக எலான் மஸ்க் கூற, ஒப்பந்தம் உறுதியான பிறகு, ரத்து செய்வது சரியில்லை என கூறி, புகார் ஒன்றை அளிக்க உள்ளதாகவும் ட்விட்டர் சார்பில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும், கொஞ்சம் கூட அசராத எலான் மஸ்க், தொடர்ந்து தனது வேலைகளை பார்த்து வருகிறார்.

Elon musk shirtless pic from greece gone viral

அந்த வகையில், ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் எலான் மஸ்க், தொழில் குறித்த ஆலோசனைகள் வழங்குவது, நெட்டிசன்களுக்கு தேவைப்படும் தகவல்களை பகிர்வது, மீம்ஸ்கள் பகிர்வது, நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது என எப்போதும் படு பிசியாக இயங்க கூடியவர். இவரது ட்விட்டர் டைம் லைன், எப்போதுமே பயனுள்ள தகவல்களை கொண்டு நிறைந்திருக்கும்.

இந்நிலையில், சுற்றுலா சென்றுள்ள எலான் மஸ்க் சட்டை இல்லாமல், நீந்தி குளித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. தற்போது கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள எலான் மஸ்க், அங்குள்ள மைகோனோஸ் என்னும் கடற்பகுதிக்கும் சென்றுள்ளார். அங்கே தனது நண்பர்களுடன் சொகுசு படகில், கடற்கரையில் எலான் மஸ்க் வலம் வந்துள்ள நிலையில், சட்டை அணியாமல் கடல் நீரில் நீந்தவும் சென்றுள்ளார்.

Elon musk shirtless pic from greece gone viral

சட்டை இல்லாமல், ட்ரவுசருடன் எலான் மஸ்க் நிற்கும் புகைப்படத்தினை யாரோ ஒருவர் எடுத்து, இணையத்தில் பதிவிட, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகவும் தொடங்கியது. அது மட்டுமில்லாமல், தான் சட்டை இல்லாமல் இருக்கும் சில மீம்ஸ் மற்றும் புகைப்படங்களை கவனித்த எலான் மஸ்க், சிலவற்றில் கமெண்ட்டுகளையும் செய்துள்ளார்.

Elon musk shirtless pic from greece gone viral

அப்படி அவர் ஒரு ட்வீட்டின் கீழ், "ஹாஹா, அடடா இனி அடிக்கடி நான் இனி சட்டை இல்லாமல் சுற்ற வேண்டி இருக்கும் போல" என குறிப்பிட்டு, தான் மீண்டும் ஆபிஸ் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் கருத்தின் கீழ், பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "ஒரு தடயமும் இல்லையே.." திருடனை பிடிக்க வழி தேடிய போலீஸ்.. "கடைசியா கொசு கொடுத்த 'Clue'

Tags : #ELON MUSK #ELON MUSK SHIRTLESS PIC #GREECE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon musk shirtless pic from greece gone viral | World News.