"என் மூலமா புது எலான் மஸ்க்-அ உருவாக்க டீல் போட்டாங்க".. மஸ்க்கின் அப்பா வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னுடைய உயிரணு மூலமாக புதிய எலான் மஸ்க்-ஐ உருவாக்க தனியார் நிறுவனம் ஒன்று தன்னை அணுகியதாக எலான் மஸ்க்கின் தந்தை எர்ரோல் மஸ்க் தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
எர்ரோல் மஸ்க்
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் தந்தை எர்ரோல் மஸ்க். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருக்கும் பொறியியலில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது இவர் பதிவிடும் கருத்துக்கள் இணையவெளியில் வைரலாவதுண்டு. அந்த வகையில் எர்ரோல் தற்போது பகிர்ந்திருக்கும் விஷயம் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எர்ரோல் மஸ்க் கொலம்பியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தன்னை அணுகியாதகவும் தனது உயிரணு மூலமாக புதிய ஜெனெரேஷன் எலான் மஸ்க்கை உருவாக்க இருப்பதாகவும் கூறியதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,"கொலம்பியாவில் உள்ள நிறுவனம் ஒன்று என்னுடைய உயிரணு மூலமாக புது எலான் மஸ்க்கை உருவாக்க என்னிடம் ஒத்துழைப்பு கேட்டனர். அவர்கள் எனக்கு எந்தப் பணத்தையும் வழங்கவில்லை, ஆனால் அவர்கள் எனக்கு முதல் வகுப்பு விமான பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குமிடம் மற்றும் அனைத்து வகையான பொருட்களையும் வழங்கியுள்ளனர். எனக்கு இன்னொரு குழந்தை கிடைக்குமானால் நான் அதை செய்வேன்" என்றார். இது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | தாங்க முடியாத வறட்சி.. மழை வரணும்னு மக்கள் நடத்திய வினோத திருமணம்.. இது புதுசால்ல இருக்கு..?

மற்ற செய்திகள்
