"அவங்க தயாரிச்ச காரைவிட".. புள்ளி விபரங்களை அடுக்கிய நபர்.. கூலாக எலான் மஸ்க் போட்ட கமெண்ட்.. பத்திகிட்ட ட்விட்டர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், தனது போட்டி நிறுவனம் குறித்து போட்ட கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | எலான் மஸ்க்கின் புதிய பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க.. மொத்த அமெரிக்காவும் ஷாக் ஆகிடுச்சு..!
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கமெண்ட்
உலக அளவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் நிறுவனமாக முன்னணியில் இருந்துவருகிறது டெஸ்லா. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான லூசிட் க்ரூப் (Lucid Group) இரண்டாம் காலாண்டில் கார் உற்பத்தி மற்றும் கார் டெலிவரியை கணிசான அளவு குறைத்திருக்கிறது. 12,000-14,000 இருந்த கார் தயாரிப்பை 6,000-7000 ஆக அந்நிறுவனம் குறைத்திருக்கிறது. இரண்டாம் காலாண்டில் அந்நிறுவனம் டெலிவரி செய்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 679 ஆகும்.
இந்த புள்ளி விபரங்களை முதலீட்டு ஆலோசனையாளரான கேரி பிளாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எலான் மஸ்க்,"அவர்கள் கார்களை உருவாக்கியதை விட இரண்டாம் காலாண்டில் எனக்கு அதிகமான குழந்தைகள் இருந்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள்
எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. எலாஸ் மஸ்க் தனது முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவின் பாடகர் கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஷிவோன் சிலிஸ் மூலமாக இரட்டை குழந்தைக்கு மஸ்க் தந்தையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லூசிட் க்ரூப் நிறுவனத்தின் கார் தயாரிப்பு குறைக்கப்பட்டதை பகடி செய்யும் விதமாக மஸ்க் இவ்வாறு கமெண்ட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
I had more kids in Q2 than they made cars!
— Elon Musk (@elonmusk) August 4, 2022
Also Read | "மகன நெனச்சு ஒண்ணும் நான் பெருமைப்படல, ஏன்னா.." எலான் மஸ்க் பற்றி தந்தை எரோல் சொன்ன பரபரப்பு கருத்து..