எலான் மஸ்க்கின் புதிய பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க.. மொத்த அமெரிக்காவும் ஷாக் ஆகிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய விமான நிலையத்தினை கட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | "மகன நெனச்சு ஒண்ணும் நான் பெருமைப்படல, ஏன்னா.." எலான் மஸ்க் பற்றி தந்தை எரோல் சொன்ன பரபரப்பு கருத்து..
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
பயணம்
உலகத்தின் நம்பர் 1 பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் தனது சொந்த விமானத்தில் மட்டுமே பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரிடம் தற்போது 2015 Gulfstream G650 எனும் பிரவேட் ஜெட் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு புதிய ஜெட் வாங்க திட்டமிட்டிருக்கிறார். இது அந்த ஆண்டு அவரிடம் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் தனக்கென விமான நிலையத்தினை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் பகுதியில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது டெக்ஸாஸ் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த விமான நிலையத்தினை எலான் மஸ்க் மற்றும் அவரது உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் பயன்டுத்துவார்கள் என தெரிகிறது.
அனுமதி
கடந்த ஆண்டு இறுதியில் டெஸ்லா தலைமையகம் சிலிக்கான் வேலியில் இருந்து டெக்சாஸுக்கு மாற்றப்பட்ட நிலையில், மாநிலத்தின் மையத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது. இருப்பினும், புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட அமெரிக்க விமான போக்குவரத்து துறையில் அனுமதி பெறவேண்டும். அதுமட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்தும் அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சொந்தமாக விமான நிலையம் கட்டுவதாக தகவல்கள் வெளியாகி பலராலும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.