"இனிமே அப்பா தேவையில்ல.." திருநங்கையாக மாறிய எலான் மஸ்க் மகன்.. பரபரப்பை ஏற்படுத்திய பின்னணி..
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவுமான எலான் மஸ்க், எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கக் கூடியவர்.
எலான் மஸ்க் குறித்த செய்திகள் அடிக்கடி இணையத்தில் ரவுண்டு அடித்துக் கொண்டே இருக்கும். சமீபத்தில் கூட, ட்விட்டரை அவர் வாங்கப் போவதாக செய்திகள் பரவி, பெரிய அளவில் இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருந்தது.
அந்த வகையில், எலான் மஸ்க் மகன் செய்துள்ள மனுதாக்கல் குறித்து தற்போது வெளிவந்துள்ள தகவல், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனுத்தாக்கல் செய்த எலான் மஸ்க் மகன்
கடந்த 2000 ஆம் ஆண்டு ஜெனிபர் ஜஸ்டின் வில்சன் என்பவரை எலான் மஸ்க் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் ஒரு இரட்டைக் குழந்தையும் உள்ளது. அதில் ஒருவர் தான் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க். தற்போது 18 வயதாகும் இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இனி எந்த சம்மந்தமும் இல்ல..
ஏப்ரல் மாதமே இந்த மனுவை அவர் தாக்கல் செய்ததாக கூறப்படும் நிலையில், அதில் என்ன குறிப்பிடப்பட்டு இருந்தது என்பது பற்றிய தகவல், தற்போது வெளி வந்துள்ளது. அதில், இனி என் உயிரியல் தந்தையுடன் வாழ விரும்பவில்லை என்றும், இனிமேல் எவ்விதத்திலும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, தனது பெயர் மற்றும் பாலினத்தையும் அவர் மாற்றிக் கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்படி...
சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் என்ற தனது பெயரை விவியன் ஜென்னா வில்ஸன் என மாற்றப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தந்தையின் பெயரை மாற்றி, தாயாரான வில்ஸனின் பெயரை இணைத்துள்ளார். அமெரிக்க அரசின் சட்டப்படி, ஒருவருக்கு 18 வயது கடந்தால், தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற உரிமை உள்ளது.
சேவியர் அலெக்ஸாண்டர் பாலின மாற்றம் செய்வது குறித்து, எலான் மஸ்க் தரப்பில் இருந்து எந்த விளக்கங்களும் அளிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான செய்திகள், தற்போது இணையத்தில் வேகமாக பரவி, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி வருகிறது.