"மகன நெனச்சு ஒண்ணும் நான் பெருமைப்படல, ஏன்னா.." எலான் மஸ்க் பற்றி தந்தை எரோல் சொன்ன பரபரப்பு கருத்து..
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் குறித்து அடிக்கடி இணையத்தில் ஏதாவது செய்திகள் வலம் வருவதை நாம் பார்த்திருப்போம்.

Also Read | "என் மூலமா புது எலான் மஸ்க்-அ உருவாக்க டீல் போட்டாங்க".. மஸ்க்கின் அப்பா வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
சமீபத்தில் கூட அவருக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்று வந்த விவகாரம், கடும் பரபரப்பை நெட்டிசன்கள் மத்தியில் கிளப்பி இருந்தது.
அது மட்டுமில்லாமல், அவ்வப்போது ட்விட்டரில் எலான் மஸ்க் பகிரும் ட்வீட் அல்லது நெட்டிசன்கள் கமெண்ட்டுகளுக்கு எலான் அளிக்கும் பதில் கூட இணையத்தில் அதிகம் வைரலாகும்.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தையான எரோல் மஸ்க், மகன் எலான் குறித்து தெரிவித்துள்ள கருத்து, இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது வளர்ப்பு மகளுடன் எரோல் மஸ்க் குழந்தையை பெற்றுக் கொண்டதாக இணையத்தில் செய்தி ஒன்று வலம் வந்து கடும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
தங்களின் சகோதரி முறை வரும் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொண்டதால், எலான் மஸ்க் உள்ளிட்ட மற்ற பிள்ளைகள் யாரும் தந்தை எரோல் மஸ்க்கிடம் பேசுவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது தனது மகன் எலான் மஸ்க் குறித்து நிகழ்ச்சி ஒன்றின் பேட்டியில் சில கருத்துக்களை எரோல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், எரோலிடம், எலான் மஸ்க் நிறைய விஷயங்களை உருவாக்கி விட்டார் என்றும், அவரை நினைத்து நீங்கள் பெருமை கொள்கிறீர்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த எரோல் மஸ்க், "எலான் மஸ்க்கை நினைத்து நான் பெருமிதம் கொள்ளவில்லை. நாங்கள் நீண்ட காலமாக நிறைய விஷயங்களை செய்து வரும் குடும்பம் தான். திடீரென நாங்கள் எதையோ செய்து சாதிக்க ஆரம்பித்தவர்களும் இல்லை. ஆனால் எலான் மஸ்க், மற்ற குடும்பத்தினரை விட ஒரு படி மேலே இருக்கிறார்" என தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
எலான் மஸ்க்கை நினைத்து தான் பெருமை கொள்ளவில்லை என கூறிய ஏரோல், எலான் மஸ்க்கின் இளைய சகோதரனும், தனது மகனுமான கிம்பால் மஸ்க்கை நினைத்து, தான் பெருமைப்படுவதாகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், எலான் மஸ்க் விரைவில் தனக்கு துணையாக ஒரு பெண்ணை தேர்வு செய்ய வேண்டும் என்றும், உடலை சிறந்த முறையில் பார்த்துக் கொள்ள வேண்டுமென எரோல் மஸ்க் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
