பதக்கத்தோட தான் 'இந்தியா' திரும்புவேன்னு நினச்சேன்...! 'தோத்துட்டேன்னு சத்தியமா நம்பவே முடியல...' - கண்ணீர் விட்டு அழுத மேரி கோம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை துரதிர்ஷ்டவசமாக நிறைவேறவில்லை என இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை பிரிவில் கலந்துகொண்டார் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.
இன்று (29-07-2021) நடந்த பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
குத்துசண்டை போட்டியின் முதல் சுற்றில் 1-4 என்ற கணக்கில் தோற்ற மேரி கோம், இரண்டாவது சுற்றில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் வலென்சியா வெற்றியாளராகவும், மேரி கோம் நாக் அவுட்டாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கூறிய மேரி கோம், 'இந்த முடிவு நான் எதிர்பார்க்காதது. நான் பதக்கத்துடன் இந்தியாவுக்குத் திரும்புவேன் என்று நினைத்தேன். நான் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தேன் என்பதை இன்னும் நம்பவே முடியவில்லை. நான் 40 வயது வரை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பேன்' என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.