சென்னையில நாளைக்கு (ஜூன்-22) பல ஏரியால 'பவர் கட்' இருக்காம்...! எத்தனை மணிக்கு 'கரண்ட்' போகும் தெரியுமா...? - மின்வாரியம் வெளியிட்டுள்ள தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் எந்தெந்த பகுதியில் நாளைக்கு (22-06-2021) மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் மின்வாரியம் தனது பராமரிப்புப் பணிகளை செயல்படுத்தாததால், தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதனால் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வியாசர்பாடி பகுதிகளான ஆண்டாள் நகர், அன்னை தெரேசா, எஸ்.ஆர் நகர், ஆர், ஆர்.ஆர் நகர் மற்றும் நீலாங்கரை பிரிவுகளிலும், திருமுல்லைவாயில் பகுதியான எல்லம்மன்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், மின் தடை ஏற்படும்.
மேலும், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளான ராஜீவ்காந்தி நகர், பனையூர் பள்ளி தெரு, சமுத்திரா சாலை, பனையூர் குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மற்றும்
ஆவடி பாண்டேஸ்வரம் பகுதியான பாண்டேஸ்வரம் கிராமம், கதவூர், வேளச்சேரி, வைஸ்னவ் நகர், பாரதி நகர், ஆசினி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் செங்குன்றம் பகுதிகளான கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், சென்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
அம்பத்தூர் பகுதியான லேக்வியூ கார்டன், சக்தி நகர், பெருமாள் கோயில், அகரஹரம், பன்னீர்நகர், திருவள்ளுவர் சாலை, குருநாத் தெரு, எம்.டி.எச். ரோடு, ராஜா தெரு, தென்றல் தெரு, திருவேற்காடு பஸ் நிலையம், பல்லவன் நகர், வடக்கு அவென்யூ, சிவன் கோயில், செங்குட்வன் தெரு, கலக்டர் நகர், டி.வி.எஸ். அவென்யூ , வெங்கடாபுரம், வஓசி நகர் மற்றும் புழல் பகுதியான புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை 1,2 3 மற்றும் ஐ.சி.எப் பகுதியான சென்னை பாட்டை ரோடு, மூர்த்தி நகர், வடக்கு திரமலை நகர், காந்திநகர், ராஜிவ்காந்தி நகர், ஆபிசர் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும்.
அதோடு அடையாறு, மயிலாப்பூர் மற்றும் மந்தவெளி பகுதிகளான தரமணி, சின்னமாலை, இந்திரா நகர், பாலவாக்கம், அடையார், பனையூர், வேளச்சேரி மேற்கு மற்றும் மையம் பிரிவுகள், ராமகல்யானமண்டபம், பி.ஆர்.எஸ் மருத்துவமனை, ஆணடாள் நாய்யப்பன் தெரு, நல்லப்பன் தெரு, டி.வி.எஸ் கோயில் தெரு, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யப்பாக்கம் பகுதியான திருவேற்காடு ரோடு, பருத்திப்பட்டு, அய்யப்பாக்கம், செம்பியம் பகுதியான பாரத் நகர், அன்னை இந்திரா நகர், காமராஜ் நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், சிட்கோ நகர் 1 முதல் 12 பிளாக்ஸ், நேரு நகர், பாலகுமரன் நகர், சுந்தரம் நகர், ஜெயராம் நகர், வளர்மதி நகர், சத்தியா சாய் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும்,
கொளத்தூர், தண்டையார்பேட்டை பகுதியான ஜி.கே.எம் காலனி, அக்பர் சதுரகம், சாய் நகர், அவ்வை தெரு, வண்ணியம்பாக்கம், கலைஞர் நகர், ஜெயராமபுரம், புங்கம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், போரூர் மாங்காடு பகுதியான போரூர் பகுதி, மாங்காடு, குன்றத்தூர், கொவூர், மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும், மதியம் 1 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
