நாளைக்கு (JULY-13) 'எந்த' ஏரியால 'ஷட் டவுன்' இருக்கு...? கரெக்ட்டா எப்போ 'கரண்ட்' போகும் தெரியுமா...? - மின்வாரியம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மின்வாரிய அவசர பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை (13-07-2021) அவசர பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் பகுதியான சைடனாமஸ் ரோடு ஒரு பகுதி, பி.டி முதலி தெரு, நாவல் மருத்துவமனை ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு பகுதிகளிலும், நேரு உள் விளையாட்டு அரங்கம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், ஹண்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, குறவன்குளம், மாணிக்கம் தெரு பகுதி, கேசவபிள்ளை பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
