விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரெண்டஸ்'. இந்த படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் மிகப் பெரிய காரணம்.

காண்டிராக்டர் நேசமணியாக வடிவேலும், அவரது அப்ரன்டிஸ்களாக விஜய், சூர்யா உள்ளிட்டோர் அடிக்கும் லூட்டிகள் படம் முழுக்க காமெடி பட்டாசு. இந்த படத்தில் ஒரு காட்சியில் ரமேஷ் கண்ணா தனது சித்தப்பா நேசமணியின் தலையில் சுத்தியலை போட்டுவிடுவார்.
இந்த காட்சி சம்மந்தமேயில்லாமல் நேற்று டிவிட்டர் டிரெண்டிங்கில் உலக அளவில் 4 இடம் பிடித்தது. இது காமெடி என்று புரியாமல் யார் அந்த நேசமணி அவருக்காக ஒரு நாட்டு மக்கள் இப்படி வேண்டிக் கொள்கிறார்கள் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் வேண்டும். இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்....ட்ச் மீண்டு வா நேசா ! என்று குறிப்பிட்டுள்ளார்.
என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛 pic.twitter.com/zGfVbwwrGM
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 30, 2019