ஐபிஎல் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி இறுதிவரை போராடி 1 ரன்னில் தோற்றது. போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது சமூகவலைதளங்களில் ஐபிஎல் குறித்த விவாதங்கள் அனல் பறந்தது.
இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை விளையாடிக்கொண்டிருக்கும் போது, 149 ? என பதிவிட்டிருந்தார். அதன் படி அந்த அணி மிகச் சரியாக 149 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து சென்னை அணி நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் போது மும்பை வெல்லும் என்று பதிவிட்டார். அதன் படி மிகச் சரியாக மும்பை வென்றது.
மேலும் பிளே ஆப் போட்டிகளுக்கு முன்பே இந்த இரு அணிகள் தான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதும் என்ற பதிவிட்டிருந்ததை மீண்டும் பகிர்ந்தார். இதனையடுத்து 'சதுரங்க வேட்டை' ஸ்டைலில் சொல்றீங்க என ரசிகர்கள் பதிலளித்துவருகின்றனர்.
MI wins..
— N.Nataraja Subramani (@natty_nataraj) May 12, 2019