ஐபிஎல் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மிகவும் நூல் இலையில் கோப்பையை இழந்தது சென்னை அணி.

இந்த போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்ப, ஆபத்பாந்தவனாக அணியை காப்பாற்றி இலக்கு நோக்கி அழைத்து சென்றார் வாட்சன். இந்த போட்டியில் 59 பந்துகளுக்கு 80 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந் போட்டியின் போது வாட்சனுக்கு காலில் அடிபட்டதை கூட பொருட்படுத்தாமல் சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக போராடினார். அப்போது அவரது கால்களில் இருந்து இரத்தம் கசிந்த படி இருந்தது. ஆனாலும் அதனை யாரும் கவனிக்கவில்லை.
இதுகுறித்து ஹர்பஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட பிறகே அனைவருக்கும் இதுகுறித்து தெரியவந்தது. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏர்போட்டில் வாட்சன் காலை இழுத்தபடி நடந்து செல்லும் ஃபோட்டோவை பகிர்ந்தார்.
அதில், ''என்ன மனிதர் அவர்! எங்களின் மனதில் நிலையான இடத்தை அவர் பெற்றுவிட்டார். போட்டிகளை வெல்வதை விட இதயத்தை வெல்வதே பெரியது'' என்று குறிப்பிட்டுள்ளார்.