''நானும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன் தான்'' - சிம்புவின் சிலம்பாட்டம் ஸ்டைலில் ஹர்பஜன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுகிறது. ஐபில் தொடர்பான செய்திகளும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன.

CSK Player Harbhajan Singh tweets in STR's Silambattam style

மேலும் கிரிக்கெட் வீரர்களும் அவ்வப்போது தங்கள் அணி சார்பாக பகிரும் ட்வீட்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக சென்னை அணியின் சார்பில் ஹர்பஜன் சிங் அவ்வப்போது செய்துவரும் தமிழ் ட்வீட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகின்றன.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது இரண்டு கையாலும் சிலம்பம் சுற்றும் வீடியோவை பகிர்ந்து, 'பந்து எடுத்து சுழட்டவும் தெரியும் . தேவ பட்டா கம்பு எடுத்து சுத்தவும் தெரியும் 'சிலம்பாட்டம்'. நானும் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன் தான். என்னோட வெற்றிக்கு காரணம் ஆண்டவன் தான். என்ன பா மீம் மேக்கர். அடுத்து என்ன முழுசா தமிழனா மாறுன பஜ்ஜிய பாரு அதான. தமிழ் காதல்' என்று பதிவிட்டுள்ளார்.