சிஎஸ்கே - டெல்லி அணிகள் மோதும் போட்டியில் பேசும் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த தொடரின் 50 வது லீக் ஆட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 1) நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதிவருகின்றன.

Jiiva and Sathish on Commentary on todays CSK Match for Gorilla

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் இரண்டு முறை சென்னை அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஜீவாவின் 'கொரில்லா' படக்குழு சார்பாக ஜீவாவும், நடிகர் சதீஷும் கலந்து கொண்டு உரையாடிவருகின்றனர்.  'கொரில்லா' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இந்த படத்துக்கு சாம் சி,எஸ் இசையமைத்துள்ளார், இந்த படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார்.

ஜீவா தற்போது 83 என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை அடிப்பைடயாகக் கொண்டு உருவாகிவருகிறது. ரன்வீர் சிங் இந்த படத்தில் கபில் தேவ் ஆக நடிக்க கபிர் கான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.