சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி: வைரலாகும் ஆரவ்-ஓவியா ஸ்டில்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஓவியாவின் பிறந்தநாளை நடிகர் ஆரவ் மற்றும் நண்பர்கள் இணைந்து சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்து கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Oviya celebrates her Birthday with Aarav and her friends

‘களவானி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா, கடந்த 2017ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். துணிச்சலான பெண்ணாக, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார்.

இவர் இன்று (ஏப்.29) தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். ஓவியாவின் பிறந்தநாளையொட்டி அவரது நண்பரும், நடிகரும், பிக் பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னருமான ஆரவ் மற்றும் ஓவியாவின் நண்பர்கள் சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பர்த்டே பார்ட்டியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஓவியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.