ஐபிஎல் டி20 போட்டியில் ஏப்ரல் 23-ல் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் சார்பாக மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். வார்னர் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிகபட்சமாக வாட்சன் 96 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து சிஎஸ்கே அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஐபிஎல் ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு.
ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே @ChennaiIPL னு ஒரு டீம் இன்னைக்கு #Playoff ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம். @IPL ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ #CSk' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் யாரு படம் ஓடுனாலும் ஹீரோ அங்க நாங்கடா என்ற வரி 'வீரம்' படத்தில் நல்லவன்னு சொல்வாங்க என்ற பாடலில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபில் ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே @ChennaiIPL னு ஒரு டீம் இன்னைக்கு #Playoff ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம்.@IPL ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ #CSk pic.twitter.com/6xyaMspmRE
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 23, 2019