''தல அவுட் இல்ல. நடுவரின் தவறான முடிவு'' - கொந்தளித்த சூப்பர் ஸ்டார் பட இயக்குநர்
முகப்பு > சினிமா செய்திகள்2019 ஆம் வருடத்துக்கான ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழ அந்த அணி 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் வீரர் பொல்லார்ட் 41 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து விளையாடிய சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆபத்பாண்டவனாக தொடக்கம் முதல் இறுதி வரை நிலையாக நின்று வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றார்.
ஆனாலும் அந்த அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தோனி ரன் அவுட் ஆனது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டெம்பிங் செய்வதற்கு முன்னதாகவே கிரீஸிற்குள் தோனி பேட்டை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது சந்தேகம் எழவே மீண்டும் மீண்டும் செக் செய்யப்பட்டது. இருப்பினும் அம்பயர் தோனியை அவுட் செய்தார்.
இந்நிலையில் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'பேட்ட' படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தல அவுட் இல்லை. நடுவரின் தவறான முடிவு. சென்னை அணி சிறப்பாக விளையாடியது. சிஎஸ்கேவின் ரசிகனாக இருப்பதில் பெருமை. தல தோனி அவர்களே, உங்களை எப்பொழுதும் நேசிப்போம். வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ்''என்று பதிவிட்டுள்ளார்.
Thala was not out... Bad umpiringgg...
Well played team #Chennai.... Proud to be #CSK fan.... Hats off #ThalaDhoni & team.We love u always & forever..#Yellove
Congratulations #MumbaiIndians 👏
And #manjrekar , your commentary sucked big time.
— karthik subbaraj (@karthiksubbaraj) May 12, 2019