ஐபிஎல் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மிகவும் நூல் இலையில் கோப்பையை இழந்தது சென்னை அணி.

இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த சோகத்திற்குள்ளாகினர். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி அவுட்டானது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது சமூகவலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கும் சென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் ரசிகர்களுக்கும் இடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சூப்பர் டீலக்ஸ்' பட போஸ்டரில் சென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் வீரர்கள் இடம் பெற்றுள்ள அந்த புகைப்படத்தை பகிர்ந்து, அது வெறும் கப்பு தான சாமி என பகிர்ந்துள்ளார்.
'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் முக்கியமான காட்சியில் மஷ்கினுக்கு ஞானம் வழங்குவது போல், விஜய் சேதுபதியின் அது வெறும் கல்லு தான சாமி என்கிற டயலாக் அடிக்கடி ஒலிக்கும். 'சூப்பர் டீலக்ஸ்' போஸ்டரை வடிவமைத்த கோபி பிரசன்னா தான் இந்த போஸ்டரையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
Adhu verum cup-u thaan saamy! 😄😄❤️@gopiprasannaa look at the detailing! 😃😃@itisthatis @Emadhi161 #superdeluxe #IPL2019Final pic.twitter.com/Mm7n0hd6wk
— Gayathrie (@SGayathrie) May 14, 2019