அட்லி அலுவலகத்தில் ஷாருக்கான்..- தளபதி 63-ல் கேமியோவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.

Thalapathy 63 cameo? Bollywood Star ShahRukh Khan meets Director Atlee at his office after CSK match

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்.9) இரவு சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை காண வந்த பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் அருகில் ‘தளபதி 63’ திரைப்படத்தின் இயக்குநர் அட்லி அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, ஷாருக்கான் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவின. எனினும், இது எதார்த்தமான சந்திப்பாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த தகவல் தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், கிரிக்கெட் போட்டி முடிந்ததும் அட்லியின் அலுவலகத்திற்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் புறப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருவதால், ‘தளபதி 63’ படத்தில் ஷாருக்கான் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக் கூறி வருகின்றனர்.