'விஸ்வாசம்' ஸ்டைலில் சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய பிரபல வீரர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நேற்று(10.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

Harbhajan Singh Celebrates CSK Victory like Viswasam Ajith style

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது.  ஒரு கட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனைத் தொடர்ந்து எளிதான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து பதிவிட்ட சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங், அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா சிஎஸ்கே கிட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போட வெச்சுருச்சா தல வேட்டு சிஎஸ்கேVsகேகேஆர்

அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி சிஎஸ்கே மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா இப்ப சொல்லு நாங்க கெத்தா என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.