கடந்த இருமாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மே 12 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் கருத்துகளும் அனல் பறந்துவருகின்றன. தற்போது டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்நிலையில் நடிகர் வைபவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் குறித்த பதிவொன்றை எழுதியுள்ளார். அதில், தல தோனியின் வின்னிங் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'ஆர்கே' நகர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.