வாயாடி பெத்த புள்ள.. - பிக் பாஸ் வீட்டில் களைக்கட்டிய Iceboy கேம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 12, 2019 12:56 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வரும் Freeze டாஸ்க் பயங்கர உணர்வுப்பூர்வமாக தருணங்கள் நிகழ்ந்தன.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், முதலில் முகெனின் தாய் மற்றும் தங்கை, சீக்ரெட் ரூமில் இருந்து சேரனின் ரீ-எண்ட்ரி, லாஸ்லியாவின் தந்தையின் வருகை என அழுகையும், அன்பும் கலந்த அழகான தருணங்கள் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்தது.
அதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், தர்ஷனின் தாய் மற்றும் தங்கை வந்ததும், தர்ஷனின் தாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகளும் இடம்பெற்றன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோ வீடியோவில், வனிதாவின் இரு பெண் குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தனர்.
வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் பின்னணியில் இசைக்க, குட்டீஸ்களுடன் சேர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் ஓடிப்பிடித்து, ஐஸ் பாய் விளையாடி மகிழ்ந்தனர். ஆக இன்றைய எபிசோடில் யார் அவுட்டாகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வாயாடி பெத்த புள்ள.. - பிக் பாஸ் வீட்டில் களைக்கட்டிய ICEBOY கேம் வீடியோ