''லாஸ்லியாவை ஃபோர்ஸ் பன்றாரு கவின்'' - சீக்ரெட் ரூமில் இருந்து சேரன் குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டார். அங்கிருந்து போட்டியாளர்களின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

Kavin, Losliya, Cheran, Vanitha Bigg Boss 3 Hotstar Sept 9 Episode

இது மற்ற போட்டியார்களுக்கு தெரியாது. இந்நிலையில் நேற்றைய தினம் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் லாஸ்லியாவிடம் கவின் காதல் விவகாரம் குறித்து பேசுகிறார். அதற்கு லாஸ்லியா பின்னாளில் அதனைப் பற்றி பேசுவோம் என்கிறார்.

அதனைக் கேட்டுக்கொண்டிருக்கும் சேரன் பார்வையாளர்களிடம், இந்த விஷயத்தை இங்கு பேச மாட்டோம் என்று ரெண்டு பேரும் சொன்னாங்க. ஆனா இப்போ கவின் லாஸ்லியாவை Force பண்ணிட்டு இருக்காரு. அதன் காரணம் அவர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக அதனை பண்ணிட்டு இருக்காரு. இத பார்த்து சரியா புரிஞ்சுக்கோங்க ஆடியன்ஸ் என்கிறார்.