''மத்தவங்க காரி துப்புறதுக்கா....'' - லாஸ்லியா மேல் கோபப்படும் அவரது அப்பா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்பட்ட சேரன் இன்று  (செப்டம்பர் 11) வெளியான முதல் புரொமோவில் உள்ளே அனுப்பப்படுகிறார். அதனை பார்த்த வனிதா உள்ளிட்ட பிக்பாஸ் வீட்டினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

Kavin, Losliya, Vanitha, Cheran, Bigg Boss 3 Promo 3 September 11

இரண்டாவது புரோமோவில் எல்லோரும் ஃபிரீஸ் என்று பிக்பாஸ் சொல்கிறார். அப்போது லாஸ்லியாவின் அப்பா உள்ளே நுழைகிறார். அவரை பார்த்ததும் லாஸ்லியா கதறி அழுகிறார். அவரது அப்பா முறைத்தபடி இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக வெளியான மூன்றாவது புரோமோவில் லாஸ்லியாவிடம் அவரது அப்பா, ''இதற்கா நீ உள்ளே வந்த ? நான் உன்ன அப்படி வளர்க்கல என்கிட்ட கதைக்காத என்கிறார். அவரை சேரன் சமாதானப்படுத்துகிறார். மீண்டும் பேசும் அவரது அப்பா, என்ன சொல்லிட்டு உள்ள வந்த. மற்றவங்க காரி துப்புறத பார்க்க வைக்குற. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு உள்ள வா'' என்கிறார்.

''மத்தவங்க காரி துப்புறதுக்கா....'' - லாஸ்லியா மேல் கோபப்படும் அவரது அப்பா வீடியோ