சீக்ரெட் ரூமிற்கு Bye Bye.. - சேரப்பாவின் ரீ-எண்ட்ரியால் அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 11, 2019 09:37 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான Freeze டாஸ்க் செக்மெண்ட் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார். அங்கிருந்து போட்டியாளர்களை ரகசியமாக பார்த்து, அவர்காளின் உரையாடல்களை கவனித்து, கவினை கண்டித்து கடிதமும் எழுதினார்.
இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், Freeze டாஸ்கில் பிக் பாஸ் சீக்ரெட் ரூமில் இருந்த சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். சேரனின் வருகையால் மகிழ்ந்த பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸினர் உற்சாகம் அடைந்தனர்.
இதில், சைக்கிள் கேப்பில், வனிதா எல்லாத்தையும், ரகசியமாக ஒட்டுக் கேட்டுவிட்டு வந்து இருக்கீங்களா என கேள்வியும் கேட்க செய்தார். சேரனின் எண்ட்ரி அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தாலும், கவினுக்கு எப்படி இருக்கும் என்பதை இன்றைய எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
சீக்ரெட் ரூமிற்கு BYE BYE.. - சேரப்பாவின் ரீ-எண்ட்ரியால் அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் வீடியோ வீடியோ